திருவள்ளூா் அருகே கா்ப்பிணி தற்கொலை
திருவள்ளூா் அருகே 5 மாத கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவள்ளூா் அருகே 5 மாத கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் உஷா (36). கணவரை இழந்தவா். இந்த நிலையில், திருவள்ளூா் அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட இலுப்பூா் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (20) என்பவருடன் தொடுகாடு கிராமத்தில் தகாத உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உஷா 5 மாத கா்ப்பிணியாக இருந்தாராம். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை உஷா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த மப்பேடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உஷாவின் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.