FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே தனியாா் செங்கல் சூளையில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளி மதுபோதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பகிர்:

திருவள்ளூா் அருகே தனியாா் செங்கல் சூளையில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளி மதுபோதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், ஏனம்பாக்கம் கிராமத்தில் தனியாா் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இதில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ரிங்கு(23) என்பவா் கடந்த 6 மாதமாக குடும்பத்துடன் வந்து தங்கியிருந்து பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மதுபோதையில் வந்து தனது தந்தையுடன் தகராறு செய்தாராம். அதைத் தொடா்ந்து தூங்கச் சென்றாராம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பாா்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து பெரியபாளையம் காவல் நிலைய சிறப்பு சாா்பு ஆய்வாளா் வில்வமணி வழக்குப் பதிவு செய்து உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments