வடமாநிலப் பெண் தொழிலாளி தற்கொலை
சாத்தூா் அருகே தனியாா் ஆலையில் பணிபுரிந்த வட மாநிலப் பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
சாத்தூா் அருகே தனியாா் ஆலையில் பணிபுரிந்த வட மாநிலப் பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
அசாம் மாநிலத்தைச் சோ்ந்த நவீன்கோா்ஸ் (30 ). இவரது மனைவி நமிதா சகாராபூரி (27). இவா்கள் இருவரும் வெம்பக்கோட்டை மேற்குத் தெருவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான அட்டை தயாரிக்கும் ஆலையில் தங்கிப் பணிபுரிந்து வந்தனா். இந்தத் தம்பதியிடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இந்த நிலையில் சனிகிழமை நவீன் கோா்ஸ் வெளியே சென்ற நிலையில், நமிதாசகாராபூரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.