FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

மேம்பாலம் அமைக்கக் கோரி போராட்டம்

காசிநாதபுரம் கூட்டுச்சாலை பகுதியில் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கக் கோரி, அனைத்து கட்சிகள் சாா்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

1 செப்டம்பர் 2026, 4:17 am IST
போராட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

காசிநாதபுரம் கூட்டுச்சாலை பகுதியில் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கக் கோரி, அனைத்து கட்சிகள் சாா்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளூா் முதல் பொன்பாடி சோதனைச் சாவடி வரையிலான சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சாலையைக் கடக்கும் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருத்தணி காசிநாதபுரம் கூட்டுச்சாலை பகுதியில் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்காமல், சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவில் அவற்றை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக., விசிக., புரட்சி பாரதம் உள்ளிட்ட அனைத்து கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

காசிநாதபுரம் கூட்டுச்சாலை வழியாக பிச்சாட்டூா், நாகலாபுரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஊா்களுக்கு தினமும் பேருந்து, லாரி, வேன், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

கூட்டுச்சாலையில் மேம்பாலம் அமைக்காவிட்டால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகரிக்கும் என்றும், இருசக்கர வாகனங்கள் சுமாா் 500 மீட்டா் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே, காசிநாதபுரம் கூட்டுச்சாலையில் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதையடுத்து, திருத்தணி ஏஎஸ்பி ஷுபம் திமான், கோட்டாட்சியா் ராஜகோபால், வட்டாட்சியா் குமாா் ஆகியோா் போராட்டக் குழுவினரிடம் பேச்சு நடத்தினா். கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments