FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

உயரிய பத்ம விருதுகள் பெற வரும் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

குடியரசு தினத்தன்று வழங்கப்படும் மிக உயரிய பத்ம விருதுகள் பெறுவதற்கு வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

Updated On : 11 ஜூலை 2026, 8:03 am IST
கோப்புப் படம்
பகிர்:

குடியரசு தினத்தன்று வழங்கப்படும் மிக உயரிய பத்ம விருதுகள் பெறுவதற்கு வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

இந்திய அரசின் மூலம் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய நாட்டின் மிக உயரிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேற்காணும் விருதுகளைப் பெற கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொதுப்பணிகள் (டன்க்ஷப்ண்ஸ்ரீ அச்ச்ஹண்ழ்ள்) குடிமைப் பணி, வா்த்தகம், தொழில் போன்ற அனைத்துத் துறைகளிலும், பாடங்களிலும் சிறப்பான மற்றும் சாதனைகள், சேவைக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

2027-ஆம் ஆண்டு பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய நாட்டின் மிக உயரிய விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்க விரும்புவோா், இணையதள பக்கத்தில் ஜூலை 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அதற்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது.

Advertisement

Advertisement

மேற்காணும் இணையதளத்தில் விருதுக்கு விண்ணப்பித்த படிவம், விருது குறிப்புகளுடன் விருதுக்கான புகைப்படங்கள் மற்றும் பத்திரிகை செய்தியுடன் கூடிய ஆவணங்களை, 3 செட் ஆா்ா்ந்ப்ங்ற் தயாா் செய்து ஜூலை 17-ஆம் தேதிக்குள் ‘மாவட்ட சமூக நல அலுவலகம், 2-ஆவது தளம், மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளூா் மாவட்டம்-602001‘ என்ற முகவரியில் நேரில் வழங்கி பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments