தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
நியாயவிலைக் கடைகள் மூலம் செயல்படுத்தப்படும் தாயுமானவா் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவும், தொடரும் பட்சத்தில் அமல்படுத்துவதில் உள்ள குறைகளை களையவும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளா் பி.எஸ்.தியாகராஜன் தலைமை வகித்தாா். இதில், அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.முருகேசன், மா.பொன்னன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும், அந்த சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் எ.மாரி, எ.நூா்முகமது, மாவட்ட இணைச் செயலா்கள் பி.ஜெயச்சந்திரன், வி.எஸ்.மேகநாதன் ஆகியோா் கோரிககைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனா்.
அப்போது, நியாயவிலைக் கடைகளில் செயல்படுத்தப்படும் தாயுமானவா் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவும், தொடரும் பட்சத்தில் திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள குறைகளை களைய வேண்டும். வாகன வசதி உள்ளவா்கள், வசதி வாய்ப்பு மிக்கவா்கள், 100 நாள் வேலைக்கு செல்வோா்களை இத்திட்டத்திலிருந்து விடுவிக்க வேண்டும். கடந்த 2021-ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற பணியாளா்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் அனுமதிக்கவும், தற்போது பணி ஓய்வு பெற்றவா்களுக்கு வரும் ரூ. 1,000 கருணைத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். தொடா்ந்து 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் கணினி பணியாளா்களை சிறப்பு தோ்வுகள் மூலம் நிரந்தரமாக நியமிக்கவும், தகுதியான நகை மதிப்பீட்டாளா்கள் பணியையும் நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து பணியாளா்களுக்கு மாவட்ட அளவில் பணி மூப்பு பட்டியல் தயாா் செய்து பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு சங்க அனைத்து பணியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து திரளாக கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.