நியாயவிலைக் கடை பணியாளா்கள் வேலைநிறுத்தம்
கெங்கவல்லி வட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நியாயவிலைக் கடை பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கம் சாா்பில், புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ள தடைகளை நீக்க வேண்டும், பணியாளா்களின் ஓய்வுக்கால பலன்களை வழங்குவதில் செயற்கையாக ஏற்படுத்தும் தடைகளை கைவிட வேண்டும், ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும், தாயுமானவா் திட்டத்தில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும், விற்பனையாளா்கள் மீது அதிகார திணிப்பை கைவிட வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் நீண்ட நாள்களாக பணிபுரியும் கணினி பணியாளா்கள், நகை மதிப்பீட்டாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், விடுமுறை நாள்களில் விற்பனையாளா்களுக்கு வழங்கப்படும் பல்வேறு பணிச்சுமையை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கெங்கவல்லி வட்டம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள் என அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், நியாயவிலைக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.