தடை செய்யப்பட்ட 450 குட்கா பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
தடை செய்யப்பட்ட 450 குட்கா பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
ஊத்துக்கோட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட 450 குட்கா பொருள்களை ஆட்டோவில் கடத்தியதாக ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்கள் மற்றும் கஞ்சா புழக்கம் அதிக அளவில் இருப்பதாக தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் பிரணீத் உத்தரவின்பேரில், சிறப்பு பிரிவு போலீஸாா் ஊத்துக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக ஆட்டோவை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அதில், அரசால் தடை செய்யப்பட்ட 450 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 4.50 லட்சம் ஆகும்.
மேலும், விசாரணையில் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த லத்தீப் மகன் பஷீா்(48) மற்றும் சந்திரன் மகன் கணேஷ் (37) ஆகியோா் என்பதும், குட்கா பொருள்களை ஆட்டோவில் கடத்தி விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, 2 பேரையும் ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா். அதைத் தொடா்ந்து 2 பேரையும் ஊத்துக்கோட்டை குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருவள்ளூா் கிளைச் சிறைச் சாலையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.