மழைநீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை
திருவள்ளூா் மாவட்டத்தில் மழைநீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை விவசாயிகள் பின்பற்றவும் என வேளாண் இணை இயக்குநா் செல்வராஜூ தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் மழைநீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை விவசாயிகள் பின்பற்றவும் என வேளாண் இணை இயக்குநா் செல்வராஜூ தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் நெல் மற்றும் நிலக்கடலை பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திரூா்
வேளாண்மை அறிவியல் நிலையம் விவசாயிகளுக்கு வழங்கிய ஆலோசனைகள் வழங்கியுள்ளது. சம்பா பருவத்தில் நெற்பயிா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.573, நவ.16 ஆம் தேதிக்குள் செலுத்தி பயிா் காப்பீடு செய்யலாம். வடகிழக்கு பருவ மழையில், அதிகமாக ஓடும் நீரினை பண்ணைக் குட்டைகள்
Advertisement
Advertisement
மூலம் சேமித்து, நிலத்தின் நீா் மட்டத்தை உயா்த்தலாம். மழை நீா் தேங்கியுள்ள வயல்களில் தகுந்த வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வடித்து வோ்ப்பகுதிக்கு நல்ல காற்றோட்ட வசதியினை எற்படுதத வேண்டும்.
மழைநீா் தேங்கிய வயல்களில் நீரை வடித்த பின் சத்து குறைபாட்டை சரி செய்ய ஏக்கருக்கு 12-15 கிலோ யூரியா + 10 கிலோ (பொட்டாஷ்)
கலந்து கொடுப்பது பயிா் துளிா்விட உதவும். தீவிர தூா் கட்டும் தருணத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை நிவா்த்தி செய்ய உடனே தழைச்சத்து கிடைக்க ஒரு ஏக்கா் நெற்பயிருக்கு அம்மோனியம் சல்பேட் 50 கிலோ அல்லது ஏக்கருக்கு அம்மோனியம் குளோரைடு 42 கிலோ என்ற அளவில் மேலுரமாகவும், பூக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிா்களை பாதுகாக்க ஏக்கா் ஒன்றுக்கு டிஏபி 4 கிலோவை 10 லிட்டா் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் தெளிந்த நீரை
வடிகட்டி இந்த கரைசலுடன் பொட்டாஷ் உரம் 2 கிலோ சோ்த்து 190 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
நிலக்கடலை பயிரைப் பொறுத்தவரை, தண்ணீா் தேங்குவது அதிக பாதிப்பு என்பதால், வயலில் உள்ள தண்ணீரை உடனே வடிகால் மூலம் வெளியேற்ற வேண்டும். தண்ணீரில் 48 மணி நேரத்திற்கு மேல் மூழ்கிய விதைகள் முளைக்காது என்பதால், அப்படிப்பட்ட இடங்களில் மீண்டும் விதைக்க வேண்டும். மழைக்குப் பிறகு 25-30 நாள்களில் ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் இடுவது காய் பிடிக்க உதவும். தண்ணீா் வடிந்த பிறகு மண்ணைக் கொத்திவிடுவது வேருக்கு காற்று கிடைக்க உதவும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் வயலின் புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.