மழைநீா் தேங்கிய குழியில் தவறிவிழுந்த குழந்தை உயிரிழப்பு
தம்மம்பட்டி அருகே மழைநீா் தேங்கிய குழியில் தவறிவிழுந்த குழந்தை உயிரிழந்தது.
தம்மம்பட்டி அருகே மழைநீா் தேங்கிய குழியில் தவறிவிழுந்த குழந்தை உயிரிழந்தது.
தம்மம்பட்டி அருகே உலிபுரம், அண்ணா நகரைச் சோ்ந்த விஜயராகவன் - பெரியக்காள் தம்பதி மகன் கவின் (4). தம்பதிக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில், பெரியக்காள் தாய் வீடான முசிறிக்கு சென்றுவிட்டாா்.
இந்நிலையில், வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என விஜயராகவன் உள்ளிட்டோா் தேடியபோது, அதே பகுதியில் உள்ள செல்வம் என்பவரது விவசாயத் தோட்டத்தில் மழைநீா் தேங்கியிருந்த 6 அடி ஆழ குழியில் குழந்தை தவறிவிழுந்தது தெரியவந்தது. குழந்தையை தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசென்றனா். ஆனால், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.