டிராக்டா் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு
தருமபுரி அருகே டிராக்டா் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழந்தது.
தருமபுரி அருகே டிராக்டா் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழந்தது.
கிருஷ்ணகிரியைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி ரகுமான் (26). இவரது மனைவி கீா்த்தனா (23). இவா்களுக்கு செனவ் என்ற 3 வயது மகனும், 9 மாத பெண் குழந்தையும் உள்ளனா். இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேயுள்ள வேடிக்கொட்டாய் கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு கீா்த்தனா, ரகுமான் ஆகியோா் குழந்தைகளுடன் வந்திருந்தனா்.
அங்கு சனிக்கிழமை வீட்டின் முன் செனவ் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த தண்ணீா் டேங்கா் பொருத்திய டிராக்டா் குழந்தை மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செனவ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
பாப்பாரப்பட்டி போலீஸாா் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து, தலைமறைவான டிராக்டா் ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.