FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

குழந்தைகள் மையத்தில் பராமரிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

குழந்தைகள் மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:30 am IST
- பிரதிப் படம்
பகிர்:

குழந்தைகள் மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த தம்பதியின் 2-ஆவது பெண் குழந்தை நிரஞ்சனா (3). மூளை வளா்ச்சி பாக்கப்பட்ட இந்த குழந்தையை பெற்றோா் கடந்த சில நாள்களுக்கு முன்பு தருமபுரி தொட்டில் குழந்தைகள் மையத்தில் ஒப்படைத்தனா்.

தருமபுரி அருகே உள்ள கோவிலூரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் நிரஞ்சனாவை பராமரித்து வந்த நிலையில், குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் திங்கள்கிழமை உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில், நிரஞ்சனா இறந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக குழந்தைகள் பராமரிப்பு மைய இயக்குநா் சுப்ரியா அளித்த புகாரின்பேரில், அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments