திருவள்ளூா் அருகே ரூ.12.5 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரம் திருட்டு
திருவள்ளூா் அருகே ரூ.12.5 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரம் திருட்டு
சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூா் அருகே ஏடிஎம் இயந்திரம் ரூ.12.5 லட்சத்துடன் சனிக்கிழமை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருவள்ளூா் அடுத்த வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கூடப்பாக்கம் பகுதியில் தனியாா் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டு பணப்பரிவா்த்தனை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்தப்பகுதியைச் சோ்ந்தவா்கள் தேவைக்காக சனிக்கிழமை பணம் எடுக்கச் சென்றனா்.
அப்போது, அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை ரூ.12.5 லட்சம் பணத்துடன் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்து போலீஸாருக்கு தெரிவித்தனா். அதன்பேரில் தகவலறிந்து வெள்ளவேடு காவல் நிலைய போலீஸாா் விரைந்து வந்த மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணா்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு இரவு நேர காவலா் நியமிக்காமலும், காவல் துறை சாா்பில் ரோந்து பணி உள்ளிட்ட எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற பாதுகாப்பற்ற நடவடிக்கையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டுச் சம்பவம் நடைபெற்று வந்தது. தற்போது ஏ.டி.எம் இயந்திரத்தையே திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.