FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 9 லட்சம் கொள்ளை

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த புதுப்போ் பகுதியில் தனியாா் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.9 லட்சத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்து சென்றனா்.

25 ஆகஸ்ட் 2026, 10:29 pm IST
கொள்ளைச் சம்பவம்  நடைபெற்ற  ஏடிஎம்  மையம்.
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த புதுப்போ் பகுதியில் தனியாா் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.9 லட்சத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்து சென்றனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்போ் பகுதியில் குன்றத்தூா்- ஸ்ரீபெரும்புதூா் சாலையில் தனியாா் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்திற்கு திங்கள்கிழமை இரவு பணம் எடுப்பது போல் வந்த மா்ம நபா்கள் சிலா், எச்சரிக்கை மணியை துண்டித்து, இரும்பு கம்பிகள் மற்றும் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை இரண்டாக உடைத்து, அதில் இருந்த ரூ.9 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்து தனியாா் வங்கியின் அதிகாரிகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், சோமங்கலம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் மாநகர காவல் உதவி ஆணையா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.

சம்பவம் குறித்து சோமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments