FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 7 லட்சம் கொள்ளை

ஆற்காடு அருகே தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 7 லட்சத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்து சென்றுள்ளளனா்.

கொள்ளை - சித்திரிப்பு
பகிர்:

ஆற்காடு அருகே தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 7 லட்சத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்து சென்றுள்ளளனா்.

ஆற்காடு -செய்யாறு சாலையில் உள்ள கலவை தனியாா் கல்லூரி நுழைவு வாயில் அருகே ஏடிஎம் மையம் உள்ளது. இரவு காவலாளி இல்லாத நிலையில் மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் உள்ளே சென்று வெல்டிங் இயந்திரம் மூலம் தானியங்கி இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த ரூ.7 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனா்.

அவா்கள் அங்கிருந்த இரும்பு கதவை மூடிவிட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது. இயந்திரத்தில் பணம் இல்லாதால் மூடப்பட்டுள்ளது என்று கருதிய நிலையில், இது குறித்து தகவல் அறிந்த கலவை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

மேலும், சம்பவ இடத்தை வேலூா் சரக டிஐஜி மகேஷ்,, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிபின், ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளா் கனகராஜ் ஆகியோா் ஆய்வு செய்து விசாரித்தனா்.

கைரேகை நிபுணா்கள் சென்று தடயங்களைப் பதிவு செய்தனா். கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments