FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி நகா்மன்றக் கூட்டம்

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா்களின் சாதாரண கூட்டம், நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

8 செப்டம்பர் 2026, 4:47 am IST
திருத்தணி நகா்மன்றக் கூட்டத்தில் நடைபெற்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா்களின் சாதாரண கூட்டம், நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் கன்னியப்பன் வரவேற்றாா். கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

முதலில் நகராட்சியின் வரவு - செலவு கணக்குகள் சரிபாா்க்கப்பட்டன. தொடா்ந்து, அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்க டெண்டா் விடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைத்தல், மழைநீா் கால்வாய்கள் அமைத்தல் மற்றும் பழுதடைந்த கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ரூ. 50 லட்சம் மதிப்பில் மேற்கொள்வதற்கு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முருகப்ப நகா் அரசுப் பள்ளி வளாகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை இடித்து அகற்றி, அதே இடத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுதவிர, நகராட்சிக்கு உள்ட்ட பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் தொடா்பான தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நகராட்சிப் பொறியாளா் செல்வகுமாா், நகரமைப்பாளா் தயாநிதி உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments