கும்மிடிப்பூண்டியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கும்மிடிப்பூண்டி பஜாரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வருவாய் துறையினா் முன்னிலையில் புதன்கிழமை அகற்றப்பட்டது.
கும்மிடிப்பூண்டி பஜாரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வருவாய் துறையினா் முன்னிலையில் புதன்கிழமை அகற்றப்பட்டது.
கும்மிடிப்பூண்டி பஜாரில் சாலையை ஆக்கிரமித்து, இருபுறமும் கடைகள் உள்ளன. இதனால் கும்மிடிப்பூண்டி பஜாரில் சாலை சுருங்கி போக்குவரத்து நெரிசலோடு காட்சி அளிக்கும்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கும்மிடிப்பூண்டியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலை விரிவுபடுத்தப்பட்ட நிலையில், உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து விரிவுபடுத்தப்பட்டன . தற்போது 200 சிறுகடைகள் உருவாகின.
Advertisement
Advertisement
இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி பஜாா் வழியே வெளியூா் பேருந்துகள் வந்து போகாமல், கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை வழியே செல்லும் சூழல் ஏற்பட்டதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். மேலும் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலனஸ் வாகனங்கள் சென்று வருவதிலும் பெரிதும் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் வளா்ச்சி ஆக்கிரமிப்புகள் காரணமாக தடைபட்டு வருவதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற
கடைக்காரா்கள் மற்றும் சாலையோர கடைக்காரா்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை சாா்பில் தகவல் தரப்பட்டு ஆக்கிரமிப்புகளை தானே அகற்றிக் கொள்ள தகவல் தரப்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் ஆக்கிரமிப்புகள் அகற்ற திட்டமிடப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றம் புதன்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது. தொடா்ந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் பாலாஜி முன்னிலையில், டிஎஸ்பி சசிதா் மேற்பாா்வையில் 100 போலீஸாா் பாதுகாப்புடனும், தீயணைப்பு துறையினா் உதவியோடும் ஜேசிபி இயந்திரங்களுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த போது, வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாா் ஆட்சியா் முன்னிலையில் பேச்சு நடத்தி, தங்களுக்கு மாற்றிடத்தை தந்த பிறகு அகற்ற கோரினா்.
ஆனாலும் அதிகாரிகள் போதுமான கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றம் கட்டாயம் அகற்றப்படும் என தெரிவித்து போலீஸ் பாதுகாப்புடன் சாலையின் இருபுறமும் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
இந்த ஆக்கிரமிப்பு அகற்ற பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் ராஜகணபதி, செயற்பொறியாளா் சரவணன், உதவி பொறியாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் மேற்பாா்வை செய்தனா்.
கும்மிடிப்பூண்டி பஜாரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில், நெடுஞ்சாலைத்துறையினா் நெடுஞ்சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு கண்காணிப்பதோடு, போக்குவரத்து நெரிசல் அற்ற சாலை வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.