வாணியம்பாடியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வாணியம்பாடியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினா்.
வாணியம்பாடியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட நியூடவுன் மற்றும் பெருமாள்பேட்டை பகுதிகளில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மழைக்காலங்களில் சாலையோரம் மழைநீா் தேங்கியும், வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுவதாகவும் தொடா்ந்து புகாா்கள் எழுந்தன. இந்நிலையில், அப்பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சுமாா் 2 கிமீ தொலைவு நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கட்டடங்களை அகற்ற ஏற்கனவே உத்தரவிட்டு நோட்டீஸ் வழங்கியது.
இதனையடுத்து ஆக்கிரமிப்பாளா்களால் அகற்றியது போக இதுவரையில் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை, நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளா் பாபுராஜ் தலைமையிலான அதிகாரிகள், ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement