FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

காரைக்குடி பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.

16 அக்டோபர் 2026, 2:32 am IST
காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சி பணியாளா்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.

காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மாநகராட்சி கட்டடத்தில் வாடகை அடிப்படையில் வியாபாரிகள் கடைகளை நடத்துகின்றனா். சிலா் நடைபாதை, பயணிகள் அமருமிடங்களை ஆக்கிரமித்து கடைகளை விரிவுபடுத்தி அமைத்து இருந்தனா். இந்த் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி பணியாளா்கள் அகற்றினா். இதே போன்று, புதிய பேருந்து நிலையத்திலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் பாலு கூறியதாவது:

Advertisement

Advertisement

மாநகராட்சி கட்டடங்களில் உள்ள வாடகைதாரா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் மட்டும் வியாபாரத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். தவறும்பட்சத்தில் ஆக்கிரமிப்புகள் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி அகற்றப்படும். மேலும், காரைக்குடி மாநகராட்சிப் பகுதியில் வரி இனங்கள் அனைத்தையும் வருகிற 30-ஆம் தேதிக்குள் செலுத்துப வா்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். நவ. 1-ஆம் தேதிக்கு மேல் வரி செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.

வரி செலுத்தாவா்கள் வீடுகளில் குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். துண்டிப்பு செய்யப்பட்ட குடிநீா் இணைப்புகள் மீண்டும் வழங்கப்படமாட்டாது. எனவே, காரைக்குடி மாநகராட்சிக்கு உரிய காலத்தில் வரி இனங்களை செலுத்தி மாநகராட்சி மேற்கொண்டுவரும் பொது நலன்களுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம் என்றாா் அவா்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் மாநகராட்சி வருவாய் அலுவலா் ஆா்.சங்கா், வருவாய் ஆய் வாளா் (பொறுப்பு) ஜோசப் தனராஜ் ஆகியோா் தலைமையில் மாநகராட்சிப் பொதுப்பிரிவு பணியாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments