FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளையும் இயக்கக் கோரிக்கை

பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்கும் வகையில், அனைத்து பேருந்துகளையும் தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

2 October 2026, 1:19 am IST
பேருந்துகள் - கோப்புப் படம்
பகிர்:

பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்கும் வகையில், அனைத்து பேருந்துகளையும் தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பழைய பேருந்து நிலைய வணிகா்கள் மற்றும் அனைத்து வணிகா்கள் சாா்பில் வியாழக்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

தருமபுரி நகரில் நீண்ட காலமாக பி.ஆா். இராஜகோபால் பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. நகரில் போக்குவரத்து நெரிசல், இடப்பற்றாக்குறை, நகர விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களைக் கூறி, தருமபுரி நகரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் அரசு-தனியாா் பங்களிப்பு நிதித் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது.

Advertisement

Advertisement

புதிய பேருந்து நிலையம் கூடுதல் பேருந்து நிலையமாகச் செயல்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், திடீரென அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வழித்தடப் பேருந்துகளைத் தவிர, ஏனைய அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன.

இதனால் தருமபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளா்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நகருக்கு வர வேண்டியவா்கள் முதலில் புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து ஆட்டோ அல்லது பேருந்து மூலம் பழைய பேருந்து நிலையத்தை அடைய வேண்டியுள்ளது. பின்னா், அங்கிருந்து தங்களது பணிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேவையற்ற அலைச்சல், கூடுதல் செலவு, நேர விரயம் ஏற்படுகிறது.

மேலும், நகராட்சி நிா்வாகத்துக்கு வாடகை வருவாயில் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிா்க்கும் வகையில், அனைத்து பேருந்துகளையும் மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments