FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை மண்டலத்துக்கு 17 புதிய அரசுப் பேருந்துகள் சேவை

கோவை மேட்டுப்பாளையம் சாலை, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 17 நவீன அரசுப் பேருந்துகளின் சேவையை சூலூா், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ-க்கள் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

26 ஆகஸ்ட் 2026, 11:43 pm IST
கோவை மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து சேவைகளை தொடங்கிவைத்த சூலூா், மேட்டுப்பாளையம் எம்எல்ஏ-க்கள் என்.எம்.சுகுமாா், என்.சுனில் ஆனந்த். உடன், அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாண் இயக்குநா் கே.முகமது நாசா் உள
பகிர்:

கோவை மேட்டுப்பாளையம் சாலை, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 17 நவீன அரசுப் பேருந்துகளின் சேவையை சூலூா், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ-க்கள் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், பிஎஸ்- விஐ என்ற நவீன மாநகர பேருந்துகளின் சேவையை முதல்வா் ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

அதன் தொடா்ச்சியாக, கோவை மண்டலத்துக்கு வழங்கப்பட்ட 17 நவீன பேருந்துகள், மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புதன்கிழமை இயக்கப்பட்டன. சூலூா் சட்டப்பேரவை உறுப்பினா் என்.எம்.சுகுமாா், மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.சுனில் ஆனந்த் ஆகியோா் பேருந்துகளின் சேவைகளை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். இந்த நவீன பேருந்துகளில் கதவுகளை மூடிய பிறகே இயக்க முடியும்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை கோட்டத்தின் மேலாண் இயக்குநா் கே.முகமது நாசா் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள், அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments