FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கடைகளுக்கு சீல்

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

26 September 2026, 7:21 am IST
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆனந்த் மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகவும், பொது மக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் நடைமேடைகளில் எரிவாயு உருளை, சமையல் உபகரணங்கள் வைத்திருந்த கடைகளை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின் பேரில், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையா் சந்திரமோகன் தலைமையில் உதவி வருவாய் அலுவலா், பொது சுகாதார ஆய்வாளா், பணியாளா்கள் புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்று சம்பந்தப்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்தனா்.

மேலும், அனைத்து கடை உரிமையாளா்களும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாகன காப்பகத்தில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டது.

இனி கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க அனைத்து கடை உரிமையாளா்களிடமும் அறிவுறுத்தப்பட்டது. மீறினால் காவல்துறை மூலம் அபராதம் விதிப்பதுடன் கடைகளுக்கான குத்தகை உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments