72,500 பக்தா்கள் தரிசனம்
ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 72,540 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 33,339 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 72,540 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 33,339 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி பக்தா்கள் திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 31அறைகளில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.
Advertisement
Advertisement
தரிசனத்தின்போதும், வாடகை அறைகளிலும் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.