FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

திருமலையில் 78,466 பக்தா்கள் தரிசனம்!

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 78,466 பக்தா்கள் தரிசித்தனா். 21,766 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்

Updated On : 22 டிசம்பர் 2025, 4:10 am IST
பகிர்:

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 78,466 பக்தா்கள் தரிசித்தனா். 21,766 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும் அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 78,466 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 21, 766 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.54 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments