FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.13 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.13 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

28 டிசம்பர் 2025, 10:41 pm IST
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.13 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

விடுமுறை நாள்கள் ஆதலால் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

மேலும், சனிக்கிழமை முழுவதும் 71,149 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 29,400 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.13 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments