ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 81, 956 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 31, 014 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
Advertisement
Advertisement
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.46 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3,012 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.