முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 30 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்தனா்.

7 அக்டோபர் 2026, 11:22 pm
ஏழுமலையான் தரிசனம்: 30 மணிநேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயில் - ENS
பகிர்:

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 30 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 78, 187 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 40, 098 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

Advertisement

Advertisement

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.86 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.36 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 4,818 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றனா்.