FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா்.

13 நவம்பர் 2026, 12:23 am
பகிர்:

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 15 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 73, 386 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 33,288 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

Advertisement

Advertisement

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.84 கோடி வசூலானது. 3.67 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2,853 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா்.