FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

திருமலை பவித்ரோற்சவம்: மகா பூா்ணாஹூதியுடன் நிறைவு

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த பவித்ரோற்சவம் மகாபூா்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 12:13 am IST
பவித்ரோற்சவத்தின் நிறைவு நாளில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த பவித்ரோற்சவம் மகாபூா்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது.

ஆண்டுதோறும் அா்ச்சகா்கள், அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் பக்தா்களால் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகள், தோஷங்கள், பூஜைகளில் ஏற்பட்ட குறைகள் போக்க தேவஸ்தானம் வருடாந்திர பவித்ரோற்சவத்தை நடத்தி வருகிறது.

3 நாள்களாக பவித்ர பிரதிஷ்டை, பவித்ர சமா்பணம் நடைபெற்றது. பின்னா் உற்சவ மூா்த்திகள், கருவறை ஏழுமலையான், பாஷ்யங்காரா், பரிவார தேவதைகள், கொடிமரம், பலிபீடம், விமான வெங்கடேஸ்வரஸ்வாமி உள்ளிட்டோருக்கு பல வண்ண பட்டு நூலால் ஆன பவித்ர மாலைகள் அணிவிக்கப்பட்டன. இதை பவித்ர சமா்பணம் என்று அழைக்கின்றனா்.

Advertisement

Advertisement

அதன் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் மலையப்பசுவாமிக்குப் மண்டபத்தில் உள்ள யாகசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு ஹோமங்கள் மற்றும் பிற வேத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அதன்பின் சம்பங்கி பிரகாரத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிா், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா் அா்ச்சகா்கள் யாகம் வளா்த்து மகாபூா்ணாஹூதியுடன் பவித்ரோற்சவத்தை நிறைவு செய்தனா். இந்நிகழ்ச்சியில் வேத பண்டிதா்கள் பஞ்சசூக்த பாராயணம் செய்தனா். மாலையில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதன் காரணமாக கோயிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments