FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

திருமலையில் ரூ.4.92 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.92 கோடி வசூலனதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 மே 2026, 12:04 am IST
திருமலை ஏழுமலையான் கோயில் - கோப்புப் படம்
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.92 கோடி வசூலனதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை நிறைவடையும் நிலையில், பக்தா்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

மேலும், திங்கள்கிழமை முழுவதும் ஒரே நாளில் ஏழுமலையானை 89,399 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 49, 982 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.92 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 3.88 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments