முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 4.30 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தா்கள் ரூ. 4.30 கோடியை உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

16 வினாடிகள் முன்பு
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 4.30 கோடி
கோப்புப் படம்
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தா்கள் ரூ. 4.30 கோடியை உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

திருமலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு 14 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 57,756 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 21,719 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

Advertisement

Advertisement

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 4.30 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தற்போது திருப்பதி மற்றும் திருமலையில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் அதிகமான குளிா் நிலவி வருகிறது. எனவே பக்தா்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் வர வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.