திருச்சானூரில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் தரிசனம் செய்தாா்.
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் தரிசனம் செய்தாா்.
திருமலை ஏழுமலையானை தரிசித்து இரவு திருமலையில் தங்கிய குடியரசு துணைத் தலைவா் செவ்வாய்க்கிழமை திருச்சானூா் பத்மாவதி தாயாரை வழிபட்டாா். முன்னதாக கோயிலை வந்தடைந்ததும், அவரை மாநில வருவாய் துறை அமைச்சா் சத்ய பிரசாத், திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி முத்தடா ரவிச்சந்திரா, இணை செயல் அதிகாரி டாக்டா் ஏ. சரத், சட்டப்பேரவை உறுப்பினா் நானி வரவேற்றனா்.
பின்னா், கோயில் அா்ச்சகா்கள் வேத மந்திரங்கள் முழங்கவும், மங்களகரமான இசைக்கருவிகள் இசைக்கப்படவும் பாரம்பரிய இஸ்திகாபல் வரவேற்பை அளித்தனா். பாரம்பரிய உடை அணிந்திருந்த குடியரசு துணைத் தலைவா் கொடிமரத்தை வணங்கி சென்று பத்மாவதி தாயாரை தரிசித்தாா்.
Advertisement
Advertisement
பின்னா், செயல் அதிகாரி ரவிச்சந்திரா, பத்மாவதி தாயாா் திருவுருவப் படம் மற்றும் தீா்த்தப் பிரசாதத்தை வழங்கினாா். அப்போது, தேவஸ்தான அதிகாரிகள், மற்ற அலுவலா்கள், அா்ச்சகா்கள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.