முடிவுக்கு வந்தது குருமன்ஸ் சமூகத்தினரின் போராட்டம்
பழங்குடியினர் (எஸ்.டி.) ஜாதி சான்றிதழ் கேட்டு திருவண்ணாமலையில் குருமன்ஸ் சமூகத்தினர் நடத்தி வந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது.
பழங்குடியினர் (எஸ்.டி.) ஜாதி சான்றிதழ் கேட்டு திருவண்ணாமலையில் குருமன்ஸ் சமூகத்தினர் நடத்தி வந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது.
திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, தானிப்பாடி, புதுப்பாளையம் உள்பட மாவட்டம் முழுவதும் 97 கிராமங்களில் உள்ள 15,000 குருமன்ஸ் சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் (எஸ்.டி.) ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
சில ஆண்டுகளாக இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. கடந்த திங்கள்கிழமை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, திருவண்ணாமலை-செங்கம் சாலை, கிரிவலப் பாதையில் எமலிங்க சன்னதி எதிரே உள்ள மயானத்தில் அவர்கள் குடியேறி காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கினர்.
Advertisement
Advertisement
இவர்கள் நாள்தோறும் பல்வேறு நூதனப் போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன்படி, 6-ஆவது நாளாக சனிக்கிழமை தங்களது தலையில் தேங்காய் உடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முடிவுக்கு வந்தது
இந்த நிலையில் அவர்களிடம் அரூர் எம்எல்ஏ டில்லிபாபு சனிக்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, குருமன்ஸ் சமுதாய மக்களும், எம்எல்ஏவும் சென்று திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ஜாதி சான்றிதழ் தேவைப்படுவோர் 15 நாள்களுக்குள் மனு கொடுக்கலாம். மனுக்கள் மீது 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் உறுதியளித்தார்.
இதையடுத்து, சனிக்கிழமை இரவு 8 மணிக்கு குருமன்ஸ் சமுதாய மக்கள் தங்களது 6 நாள் தொடர் போராட்டத்தை முடித்துக் கொண்டு வீடுகளுக்குத் திரும்பினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.