FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஒவ்வாமையைத் தரும் கொசுவர்த்திகளின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்: துணைவேந்தர் க.முருகன் அறிவுரை

மனித உடலுக்கு ஒவ்வாமையைத் தரும் கொசுவர்த்திகளின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 9:26 am IST
பகிர்:

மனித உடலுக்கு ஒவ்வாமையைத் தரும் கொசுவர்த்திகளின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் அறிவுரை வழங்கினார்.
 வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின.
 திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வெ.பெருவழுதி தலைமை வகித்தார்.
 திருவள்ளுவர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் துறை இணைப் பேராசிரியருமான ம.செந்தில்குமார், கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ் வரவேற்றார்.
 வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
 டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் பணியில் மாணவ, மாணவிகள் ஈடுபட வேண்டும். நல்ல நீரில் உற்பத்தியாகும் டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்த இயற்கையாகவே நம்மிடம் வேம்பு, கற்றாழை, துளசி உள்ளிட்ட மூலிகைச் செடிகள் உள்ளன. இதையெல்லாம் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
 உடலுக்கு ஒவ்வாமையைத் தரும் கொசுவர்த்திகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
 கருத்தரங்கில் டெங்கு காய்ச்சல் எவ்வாறு வருகிறது, டெங்கு கொசுக்களை ஒழிப்பது எப்படி என்பது குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. இதில், கல்லூரிச் செயலரும், தாளாளருமான என்.குமார், கல்விப் புல முதன்மையர் அழ.உடையப்பன், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார், துணைத் தலைவர் ஜி.புல்லையா, முன்னாள் தலைவர் பி.ராமச்சந்திர உபாத்தியாயா மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments