FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் கரடியை துரத்திய நாய்

Updated On : 28 ஜூலை 2026, 2:27 am IST
குடியிருப்புப் பகுதியில் நடமாடிய கரடியை துரத்தும் நாய்.
பகிர்:

உதகை, ஜூலை 27: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் நடமாடிய கரடியை நாய் துரத்தியது.

கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலனி கிராமத்தில்  கரடி நடமாடியதை கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீட்டின் கதவுகளை மூடினா். அப்போது அங்கிருந்த வளா்ப்பு நாய் ஒன்று குரைத்துக் கொண்டே கரடியை துரத்தியது.

இதில் அச்சமடைந்த கரடி அருகே உள்ள தேயிலைத் தோட்டம் வழியாக புதருக்குள் சென்று மறைந்தது. இப்பகுதியில் நடமாடும் கரடியை  கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments