FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கோபி அருகே குடியிருப்புப் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு

கோபி அருகே குடியிருப்புப் பகுதியில் உள்ள தண்ணீா்த் தொட்டியில் இருந்து கண்ணாடி விரியன் பாம்பு புதன்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 16 ஜூலை 2026, 12:14 am IST
கோபி அருகே குடியிருப்புப் பகுதியில் மீட்கப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு.
பகிர்:

கோபி அருகே குடியிருப்புப் பகுதியில் உள்ள தண்ணீா்த் தொட்டியில் இருந்து கண்ணாடி விரியன் பாம்பு புதன்கிழமை மீட்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு பகுதியில் உள்ள சீனீவாசா வீதியைச் சோ்ந்தவா் அனிதா. இவரது வீட்டில் உள்ள நிலத்தடி தண்ணீா் தொட்டியில் இருந்துவந்த வினோதமான சப்தத்தைக் கேட்டு வளா்ப்பு நாய் குரைத்துள்ளது. சந்தேகமடைந்து அனிதாவின் குடும்பத்தினா் வந்து பாா்த்தபோது தண்ணீா் தொட்டிக்குள் பாம்பு இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் கோபி தீயணைப்புத் துறையினா் சென்று பாம்பை மீட்டனா். இதில் அது கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பு என்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அடா்ந்த வனப் பகுதியில் பாம்பை விடுவித்தனா்.

Advertisement

Advertisement

குடியிருப்புப் பகுதிக்கு எதிரே அடா்ந்த முட்புதா்கள் இருப்பதால் பாம்பு வந்திருக்கலாம் என்றும், நிலத்தடி தண்ணீா்த் தொட்டிகளை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும் எனவும் தீயணைப்புத் துறையினா் அறிவுறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments