மனு நீதிநாள் முகாம்: 102 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
சேத்துப்பட்டு வட்டம், முருகமங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 102 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சேத்துப்பட்டு வட்டம், முருகமங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 102 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முருகமங்கலம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து, 102 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, சிறு, குறு விவசாயிச் சான்று உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில், வட்டாட்சியர் அரிதாஸ், சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியர் ராம்பிரபு, மண்டல வட்டாட்சியர் சசிகலா, வருவாய் ஆய்வாளர் ஜீவா, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெகதீசன், சரோஜினி, ஆனந்தபாபு, மோகன்ராஜ், சிவரஞ்சினி, வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.