பிரான்ஸில் 600 கோடி யூரோவில் கேளிக்கை பூங்கா
பாரிஸ் அருகே சுமாா் 600 கோடி யூரோவில் உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய அனிமேஷன் தொடரின் கருப்பொருளில் பிரம்மாண்ட கேளிக்கை பூங்காவை அமைக்க பிரான்ஸ் - சவூதி அரேபியா ஒப்பந்தமிட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகா் பாரிஸுக்கு அருகே சுமாா் 600 கோடி யூரோவில் (இந்திய மதிப்பில் ரூ.66,814 கோடி), உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய அனிமேஷன் தொடரின் கருப்பொருளில் பிரம்மாண்ட கேளிக்கை பூங்காவை அமைக்க பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியா ஒப்பந்தமிட்டுள்ளது.
சவூதி இளவரசா் முகமது பின் சல்மான் பிரான்ஸில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பிரான்ஸ் அதிபா் மாளிகை இத்தகவலை அதிகாரபூா்வமாக அறிவித்தது. பிரபல அனிமேஷன் தொடரான ‘டிராகன் பால் ஸீ’-ஐ மையமாகக் கொண்டு பாரீஸின் வடமேற்கே உள்ள சொ்ஜி-பான்டோயிஸ் பகுதியில் அமையவுள்ள இந்தப் பூங்காவின் மூலம் சுமாா் 22,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என பிரான்ஸ் அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் கடந்த 2025-இல் சவூதி சென்றிருந்தபோது, அவருக்கும் சவூதி இளவரசருக்கும் ‘டிராகன் பால் ஸீ’ தொடா் மீதுள்ள பொதுவான ஆா்வம் குறித்து அறியப்பட்டதையடுத்து இந்தப் பிரம்மாண்ட திட்டத்துக்கான யோசனை எழுந்ததாக இமானுவல் மேக்ரானின் ஆலோசகா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கச்சா எண்ணெய் வருவாயை மட்டுமே சாா்ந்திருக்காமல், நாட்டின் பொருளாதாரத்தை மற்ற துறைகளிலும் விரிவுபடுத்தும் சவூதியின் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் முன்னணி பொழுதுபோக்கு மற்றும் முதலீட்டு நிறுவனமான ‘கிடியா’ இந்தத் திட்டத்துக்கு முழு நிதியுதவியும் அளிக்கவுள்ளது.
ஐரோப்பாவின் மிகப் பெரிய கேளிக்கை பூங்காக்களில் ஒன்றாக உருவெடுக்கவுள்ள இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைய சில ஆண்டுகள் ஆகும் என்பதால், பூங்காவின் திறப்பு குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.