மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம்
வந்தவாசியை அடுத்த பொன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், "மாணவர்கள் எதிர்நோக்கும் சமூக பிரச்னைகள்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த பொன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், "மாணவர்கள் எதிர்நோக்கும் சமூக பிரச்னைகள்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை மங்கவரதாள் தலைமை வகித்தார். வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் நந்தகோபால் முன்னிலை வகித்தனர். வந்தவாசி அருவி அறக்கட்டளைத் தலைவர் ஏ.ஜெ.ரூபன் மாணவர்கள் எதிர்நோக்கும் சமூக பிரச்சினைகள் குறித்து விளக்கிப் பேசினார். பள்ளி ஆசிரியர்கள் சதாசிவம், செல்வராஜ், கவிஞர் அகிலன் மற்றும் கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.