3 வயது குழந்தையை தூக்கிகொண்டு ஓடிய ராஜஸ்தான் இளைஞருக்கு அடி-உதை
கீழ்பென்னாத்தூர் அருகே 3 வயது குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடிய, ராஜஸ்தான் இளைஞரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து, உதைத்தனர்.
கீழ்பென்னாத்தூர் அருகே 3 வயது குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடிய, ராஜஸ்தான் இளைஞரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து, உதைத்தனர்.
கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுரேஷ். இவரது 3 வயது பெண் குழந்தை புதன்கிழமை காலை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் சென்றனராம்.
இதில் ஒருவன் திடீரென நைசாகப் பேசி, சுரேஷின் குழந்தையை தூக்கிக்கொண்டு நடந்தாராம்.
இதைக் கவனித்த பொதுமக்கள் குழந்தையை அந்த இளைஞர் கடத்திச் செல்வதாக நினைத்து கூச்சலிட்டனர்.
உடனே அங்கு திரண்ட பொதுமக்கள் குழந்தையுடன் ஓட்டம் பிடித்த இளைஞரைப் பிடித்து மின்கம்பத்தில் கட்டினர்.
பின்னர், பொதுமக்கள் சேர்ந்து அடித்து, உதைத்தனர். இதைப் பார்த்த அவருடன் வந்த மற்ற 2 பேர் தப்பி ஓடினர்.
தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸார் விரைந்து சென்று பிடிபட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என்றும், கீழ்பென்னாத்தூர் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநில இளைஞர்களுடன் பிடிபட்டவர் வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளான இளைஞர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.