பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அவசர ஊர்தி மோதல்: கல்லூரி மாணவர் சாவு
செய்யாறு அருகே திருத்தணி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது 108 அவசர ஊர்தி
செய்யாறு அருகே திருத்தணி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது 108 அவசர ஊர்தி மோதியதில் கல்லூரி மாணவர் இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
வந்தவாசி வட்டம், தேசூர் கிராமத்தைச் சேர்ந்தவரும், சென்னை லயோலா கல்லூரி மாணவருமான வெ.சிலம்பரசன் (21), அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் (23) உள்ளிட்ட பலர் குழுவாக திருத்தணி முருகன் கோயிலுக்கு சனிக்கிழமை இரவு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் நெடுங்கல் கிராமம் அருகே சென்றபோது, செங்கல்பட்டில் இருந்து செய்யாறு நோக்கி வந்த 108 அவசர ஊர்தி அவர்கள் மீது மோதியதாகத் தெரிகிறது.
இதில், சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த சுப்புராஜ், வந்தவாசி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அனக்காவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.