FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என முதல்வர் சுவேந்து அதிகாரி பேசியது குறித்து...

Updated On : 26 ஜூலை 2026, 8:43 pm IST
சுவேந்து அதிகாரி - ஏஎன்ஐ
பகிர்:

மேற்கு வங்கத்தில் தொகுதி மறுவரையறைக்குப் பிறகு உறுப்பினர்களின் எண்ணிக்கை 400ஐத் தாண்டும் என்பதால், புதிய சட்டப்பேரவை கட்டப்படும் என அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி இன்று (ஜூலை 26) தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் தற்போது உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாததால், மறுவரையறைக்குப் பிறகு உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாகும்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் சுவேந்து அதிகாரி பேசியதாவது:

Advertisement

Advertisement

''புதிய சட்டப்பேரவைக் கட்டடம் எதிர்காலத்தில் கட்டப்படும். அதற்கான நிலம் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டது. தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு, உறுப்பினர்களின் எண்ணிக்கை 400 ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், அனைவரும் இந்த அவையில் அமர்வது என்பது சாத்தியமற்றது. தற்போது உள்ள இந்த சட்டப்பேரவை பாரம்பரிய கட்டமைப்பு உடையது. அதனால் இதனை தேவைக்கேற்ப அரசு பயன்படுத்திக்கொள்ளும்'' எனக் குறிப்பிட்டார்.

summary

New assembly building to be constructed as seats will increase above 400 after delimitation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments