FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாட்டின் எல்லைப் பாதுகாப்புக்கு நிலம் வழங்குவது நமது கடமை: சுவேந்து அதிகாரி

நாட்டின் எல்லைப் பாதுகாப்புக்கு நிலம் வழங்குவது நமது கடமை என மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி பேசியது பற்றி...

மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி - படம் - ஏஎன்ஐ
பகிர்:

நாட்டின் எல்லைப் பாதுகாப்புக்கு நிலம் வழங்குவது நமது கடமை என மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) பேசினார்.

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, முதல்முறையாக ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து, சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 25 கி.மீ. நிலப்பரப்பை எல்லை பாதுகாப்புப் படைக்கு முதல்வர் சுவேந்து அதிகாரி கடந்த மே மாதம் ஒதுக்கினார்.

Advertisement

Advertisement

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து சுவேந்து அதிகாரி பேசியதாவது:

புதிய அரசாங்கம் பதவியேற்று 106 நாள்கள் கடந்து விட்டன. தேசியப் பாதுகாப்புக்காக, நமது எல்லைகளில் நாம் மேற்கொண்ட பணிகளைப் பொறுத்தவரை, வேலியிடப்படாத பல பகுதிகள் இருந்தன.

எல்லைப் பாதுகாப்புப் படைக்கு நிலம் வழங்குவது நமது கடமையாகும். இருப்பினும், முந்தைய அரசாங்கம் அதைச் செய்யத் தவறியது.

2016 ஆம் ஆண்டு ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக இருந்தபோது, ​​எல்லைப் பாதுகாப்புப் படையிடம் எல்லை நிலத்தை ஒப்படைக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு கடிதத்தை எழுதினார். ஆனால் அப்போதைய அரசு நிலத்தை ஒப்படைக்கப்படவில்லை.

எங்கள் அரசு பதவியேற்றதிலிருந்து, நமது எல்லைகளைப் பாதுகாப்பதற்காக 90 சதவிகிதம் நிலத்தை நாங்கள் ஏற்கெனவே எல்லைப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைத்துவிட்டோம். நாட்டின் பாதுகாப்புக்காகவே நாங்கள் இதைச் செய்கிறோம் என்று சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.

summary

West Bengal Chief Minister Suvendu Adhikari stated on Sunday (Aug. 23) that it is our duty to provide land for the country's border security.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments