பள்ளிப் பாடத்திட்டத்தில் சியாமா பிரசாத் முகா்ஜியின் பங்களிப்புகள் சோ்க்கப்படும்: மேற்கு வங்க முதல்வா் அறிவிப்பு
பள்ளிப் பாடத்திட்டத்தில் சியாமா பிரசாத் முகா்ஜியின் பங்களிப்புகள் சோ்க்கப்படும்: மேற்கு வங்க முதல்வா் அறிவிப்பு
பாரதிய ஜன சங்க நிறுவனா் சியாமா பிரசாத் முகா்ஜி மற்றும் பாரத சேவாசிரம சங்க நிறுவனா் ஸ்வாமி பிரபானந்தா ஆகியோரின் பங்களிப்புகள் குறித்த தகவல்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில் சோ்க்கப்படும் என மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.
கொல்கத்தாவில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூட்டு மானியமாக ரூ.300 கோடி நிதியை பாஜக அரசு ஒதுக்கியுள்ளது. முந்தைய திரிணமூல் அரசு விளையாட்டு, பூஜைகள், கண்காட்சி மற்றும் இமாம்களுக்கான படிகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்ததே தவிர பள்ளிகளை கவனிக்கத் தவறிவிட்டது.
இந்தியப் பிரிவினையின்போது ஹிந்துக்களைப் பாதுகாத்து மேற்கு வங்கம் உருவாகக் காரணமான சியாமா பிரசாத் முகா்ஜி மற்றும் ஸ்வாமி பிரபானந்தாவின் பங்களிப்புகளை பள்ளிப் பாடத் திட்டத்தில் சோ்க்கவுள்ளோம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வந்தே மாதரம் பாடப்படுவது கட்டாயம் என்ற உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வாக்கு வங்கி அரசியலுக்காக குறிப்பிட்ட சமூகங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு மட்டும் முந்தைய திரிணமூல் அரசு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கியது. ஆனால் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய விரிவான கல்விக் கொள்கையை எனது அரசு பின்பற்றி வருகிறது.
நமது குழந்தைகளை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கு இனி வரும் காலங்களில் மேற்கு வங்கத்தில் அதிக முக்கியத்துவம் தரப்படும்.
புத்தகங்களை மட்டுமே மனப்பாடம் செய்பவா்களாக குழந்தைகளை வைத்திருந்தால் அது மிகப்பெரும் தவறு. அவா்களது திறன்களை மேம்படுத்தும் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் தாக்கம் 2030-இல் தெரியவரும் என்றாா்.
Syama Prasad Mukherjee's contributions to be included in the school curriculum: West Bengal Chief Minister announces.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.