உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் கருவிகள்
சேத்துப்பட்டை அடுத்த அப்பேடு, செய்யாறு வட்டத்திலுள்ள ஆக்கூர் ஆகிய கிராமங்களில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண்
சேத்துப்பட்டை அடுத்த அப்பேடு, செய்யாறு வட்டத்திலுள்ள ஆக்கூர் ஆகிய கிராமங்களில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண், தோட்டக்கலைத் துறைகள் சார்பில் வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.
சேத்துப்பட்டை அடுத்த அப்பேடு கிராமத்தில் வேளாண் துறை சார்பில், உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு நடவு நடும் இயந்திரம் மற்றும் 2 பவர் டில்லர் டிராக்டர் ஆகிய வேளாண் கருவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
விழாவில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இரா.செல்வசேகர், உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு வேளாண் கருவிகளை வழங்கினார். இதில், சேத்துப்பட்டு வேளாண் உதவி இயக்குநர் கி.கலைச்செல்வி, வேளாண் அலுவலர் ஆ.ஆனந்தன், துணை வேளாண் அலுவலர் து.ராமு, உதவி வேளாண் அலுவலர் பு.பாஸ்கரன் மற்றும் வேளாண்மைத் துறையினர், உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆக்கூர் கிராமத்தில்...: செய்யாறு வட்டம், ஆக்கூர் கிராமத்தில் அனக்காவூர் வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் கூட்டுப் பண்ணையம் திட்டன்கீழ், உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு மானியத்துடன் கூடிய விவசாயக் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர் ஆர்.மணிகண்டன் தலைமை வகித்தார். செயலர் எஸ்.வெங்கடேசன், பொருளாளர் எஸ்.சுந்தரவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனக்காவூர் வட்டார தோடக்கலைத் துறை உதவி அலுவலர் இ.முருகதாஸ், உழவர் உற்பத்தியாளர் குழு பங்களிப்புத் தொகையுடன் அரசு மானியத் தொகை ரூ.5.52 லட்சத்தில் 3 பவர் டில்லர், ஒரு களை வெட்டும் கருவி ஆகியவற்றை ஆக்கூர், கூழமந்தல் கிராமங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.