காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவ்!
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், 53 கிலோ பிரிவில் பளுதூக்குதலில் சத்தீஸ்கரைச் சேர்ந்த ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
23 வயதாகும் ஞானேஸ்வரி யாதவ் ஸ்நாட்ச் பிரிவில் 88 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோ என மொத்தம் 199 கிலோ எடையைத் தூக்கி அசத்தினார்.
Advertisement
Advertisement
பளுதூக்குதலில் ஞானேஸ்வரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளதால் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த 5 பதக்கங்களில் 4 பதக்கங்கள் பளுதூக்குதல் பிரிவில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Gyaneshwari Yadav has won a silver medal in weightlifting at the Glasgow Commonwealth Games.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.