FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

சாலை விபத்தில் விவசாயி சாவு 

கீழ்பென்னாத்தூர் அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார். 

Updated On : 26 ஜூன் 2018, 9:29 am IST
பகிர்:

கீழ்பென்னாத்தூர் அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார். 
கீழ்பென்னாத்தூர் அடுத்த சோ.காட்டுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பீமன் (45). இதே பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (33). இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை  மாலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர், சாலையூர் பகுதியில் சென்றபோது  முன்னாள் பைக்கில் சென்றுகொண்டிருந்த சிறுநாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மீது பீமன் மோதினார். இதில் காயமடைந்த பீமன் அதே இடத்தில் உயிரிழந்தார்.
காயமடைந்த கோபால், ஏழுமலை, ஏழுமலையின் பைக்கில் அமர்ந்திருந்த சிறுநாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகாமி ஆகியோரை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments