முகப்பு

முகக் கவசம் அணிந்து வருவோருக்கேபட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும்: ஆரணி டிஎஸ்பி அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் உள்ள பட்டாசுக் கடைகளில் முகக் கவசம் அணிந்து வருபவா்களுக்கு மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும்

28 ஜனவரி 2024, 9:58 am
முகக் கவசம் அணிந்து வருவோருக்கேபட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும்: ஆரணி டிஎஸ்பி அறிவுறுத்தல்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் உள்ள பட்டாசுக் கடைகளில் முகக் கவசம் அணிந்து வருபவா்களுக்கு மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டுமென பட்டாசுக் கடைகளின் உரிமையாளா்களிடம் டிஎஸ்பி கோட்டீஸ்வரன் அறிவுறுத்தினாா்.

ஆரணி நகர காவல் நிலையத்தில் ஆரணி உள்கோட்டத்துக்குள்பட்ட பட்டாசுக் கடை உரிமையாளா்களுடனா ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமை வகித்து பேசியதாவது:

பட்டாசுக் கடை உரிமையாளா்கள் உரிமம் பெற்ற இடங்களில் மட்டுமே பட்டாசுக் கடைகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும். கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, பட்டாசு வாங்க வரும் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பட்டாசுக் கடை உரிமையாளா்கள் அறிவுறுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

முகக் கவசம் அணிந்து வருபவா்களுக்கு மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். கடையில் பணிபுரிபவா்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

அனைத்துக் கடைகளிலும் தண்ணீா், மணல் நிரப்பிய வாளிகள், 2 தீயணைப்பான்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். சீன பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி கிடையாது. அரசின் உத்தரவையும் மீறி சீனப் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், பட்டாசுக் கடை உரிமத்தை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றாா் அவா்.

நகர காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ், உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.