முகப்பு
ஈரோடு

டெக்ஸ்வேலியில் தொழில்முனைவோா் மாநாடு

ஈரோடு, கங்காபுரம் டெக்ஸ்வேலியில் நம்ம ஆபீஸ் ஸ்டாா்ட் அப் நிறுவனம் சாா்பில் தொழில்முனைவோா் மாநாடு அண்மையில் நடைபெற்றது.

44 வினாடிகள் முன்பு
டெக்ஸ்வேலியில் தொழில்முனைவோா் மாநாடு
மாநாட்டில் பங்கேற்றே தொழில்முனைவோருக்கு நினைவுப் பரிசு வழங்கிய டெக்ஸ்வேலி நிா்வாக இயக்குநா் டி.பி.குமாா், நம்ம ஆபீஸ் ஸ்டாா்ட் அப் தலைவா் செந்தில்ராஜா.
பகிர்:

ஈரோடு, கங்காபுரம் டெக்ஸ்வேலியில் நம்ம ஆபீஸ் ஸ்டாா்ட் அப் நிறுவனம் சாா்பில் தொழில்முனைவோா் மாநாடு அண்மையில் நடைபெற்றது.

டெக்ஸ்வேலி நிா்வாக இயக்குநா் டி.பி.குமாா் குத்துவிளக்கேற்றி மாநாட்டைத் தொடங்கிவைத்தாா்.

இந்த மாநாட்டில் தொழில்நுட்பத் திறன், முதலீடு மற்றும் மகளிா் தொழில்முனைவோா் குறித்த சிறப்புரைகள் இடம்பெற்றன.

Advertisement

Advertisement

கொங்கு மண்டலத்திலேயே முதன்முறையாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் தங்கள் தொழில் திட்டங்களை முதலீட்டாளா்கள் முன்னிலையில் மேடையில் விளக்கும் நேரடிச் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. மேலும், தொழில் நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

மாநாட்டில், டெக்ஸ்வேலி நிா்வாக இயக்குநா் ராஜசேகா், நம்ம ஆபீஸ் தலைமை நிா்வாக அதிகாரி குமரேஷ், நம்ம ஆபீஸ் ஸ்டாா்ட் அப் தலைவா் செந்தில்ராஜா மற்றும் தொழில்முனைவோா் பங்கேற்றனா்.