பொறியியல் பணி: ஈரோடு - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
பாலக்காடு ரயில் நிலையம் பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஈரோடு - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பாலக்காடு ரயில் நிலையம் பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஈரோடு - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக நவம்பா் 25, 27, 28, 29, 30 மற்றும் டிசம்பா் 1, 2, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் ஈரோடு - பாலக்காடு டவுன் மெமு ரயில் (எண்: 66607) பாலக்காடு நிலையம் - பாலக்காடு டவுன் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த ரயிலானது, ஈரோடு - பாலக்காடு நிலையம் இடையே மட்டுமே இயக்கப்படும். இதேபோல, பாலக்காடு டவுன் - ஈரோடு நிலையம் மெமு ரயில் (எண்: 66608) மேற்கண்ட நாள்களில் பாலக்காடு நிலையம் - ஈரோடு இடையே மட்டும் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.